உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற தீர்த்தக்குடம் ஊர்வலம்

Update: 2022-04-15 10:42 GMT
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு குதிரை வண்டி, மாட்டு வண்டிகளில் பொதுமக்கள் யாத்திரை சென்றனர்.
அவிநாசி:

அவிநாசி-அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளிம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, ஊர்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். 

8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியின் மற்றொரு பகுதியாக, அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை முழுமையாக இணைத்து 2வது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து கொண்டு, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு குதிரை வண்டி, மாட்டு வண்டிகளில் பொதுமக்கள் யாத்திரை சென்றனர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News