உள்ளூர் செய்திகள்
சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம்.

சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்-சரி செய்ய கோரிக்கை

Update: 2022-04-15 09:21 GMT
புதியம்புத்தூர் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் கிராமத்திலிருந்து குறுக்கு சாலைக்கு செல்ல ஒரு சாலை உள்ளது. புதியம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் ஓட்டப்பிடாரம் சென்று குறுக்குச்சாலை செல்வதை விட இந்த ரோட்டில் சென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் குறைவு.

எனவே இந்த ரோட்டை சரள் ரோடக இருந்தும் அதிகமான பயணிகள் இந்த ரோட்டில் செல்கின்றனர். சில்லாநத்தம் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரோட்டிற்கு மேல்புறம் மின்கம்பம் அதிக அளவில் சாய்ந்து நிற்கிறது. மின்கம்பி அறுந்து விழுந்தால் ரோட்டில் செல்லும் வாகனம் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

எனவே விபத்தை தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து முன்னேற்பாடாக மின்கம்பத்தை நேராக நிறுவ வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News