உள்ளூர் செய்திகள்
நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேர் முகூர்த்தம் நடைபெற்றது.

தேர் அலங்கரிக்கும் பணி மும்முரம்

Published On 2022-04-12 09:22 GMT   |   Update On 2022-04-12 09:22 GMT
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவில் சித்ரா பவுர்ணமி பெருந்திருவிழா கடந்த 7ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் வண்ண மயில்வாகனம், காமதேனு வாகனம், பூதவாகனம், அன்னவாகனம், மயில்வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனங்களில்

சாமி வீதி உலா வருகிறது.வரும் 15 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை பால் குடம், பன்னீர் காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி, பறவைக் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை

பக்தர்கள் செலுத்துவர். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். பின்னர் 16ஆம் தேதி மாலை 6 மணி அளவில் தீர்த்தத் திருவிழாவும், 17ஆம் தேதி காலை 10.30 மணி

அளவில் திருக்கல்யாணமும், இரவு தெப்பமும் நடைபெறு-கிறது. 18-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தேரை அலங்கரிக்க மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து தீபாரா-தனை காண்பிக்-கப்பட்டு தேர் முகூர்த்தம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், பரம்பரை அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், கோவில் நிர்வாக அதிகாரி சிதம்பரம், முடப்புளிக்காடு கிராமத்தார்கள்,

ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News