உள்ளூர் செய்திகள்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பொதுத் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

Published On 2022-04-09 17:37 GMT   |   Update On 2022-04-09 17:37 GMT
மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்து அச்சம் ஏற்படாமல் இருக்கவே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தாம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

மாணவர்கள் பதற்றத்துடன் தேர்வை அணுக வேண்டாம். மகிழ்ச்சியுடன் படியுங்கள். தேர்வின் போது உங்களுக்கு தெரிந்த பாடத்தை நம்பிக்கையுடன் உறுதியுடன் எழுதுங்கள்.பள்ளிக்கு வரும்போதும், தேர்வுக்கு வரும்போது பதற்றத்துடன் வரவேண்டாம். 

கொரோனா காலத்தை மனதில் வைத்தே, பாடப் பகுதிகள் குறைக்கப் பட்டுள்ளன. பள்ளி இறுதி தேர்வு சமயத்தில் படிக்காமல் இப்போது இருந்தே மாணவர்கள் படிக்க தொடங்க வேண்டும். 

பள்ளி இறுதி தேர்வு பயத்தை போக்குவதற்காகவே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News