உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மலைவாழ் மக்களிடம் ரூ.14 லட்சம் மோசடி

Published On 2022-04-09 09:40 GMT   |   Update On 2022-04-09 09:40 GMT
மலைவாழ் மக்களிடம் ரூ.14 லட்சம் மோசடி சம்பவத்தில் போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

உப்பிலியபுரம் அருகே பச்சைமலையைச் சேர்ந்த வண்ணாடு, ஆத்திநாடு, தென்புறநாடு ஆகிய கிராமங்களைச்  சேர்ந்த 21 பேர் உப்பிலியபுரம் போலீசில் புகார் மனு அளித்தனர். 

அதில், தங்களிடம் கால்நடைகளை வாங்கிச் சென்றவர்கள், கால்நடைகளை விலைபேசி அப்பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் முன்பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, கால்நடைகளை ஓட்டிச் சென்றுள்னர். தவணை தேதி முடிந்தும் பணம் வராததால் இடைத்தரகர்களிடம் பணத்தை கேட்டதற்கு அவர்கள், முறையான பதில் சொல்லவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

புகாரின் பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பெரியமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 21 நபர்களிடம் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான கால்நடைகளை வாங்கிச் சென்றது தெரிய வந்தது. இது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News