உள்ளூர் செய்திகள்
புத்தக கண்காட்சி

திருவள்ளூரில் நடைபெறும் புத்தக கண்காட்சியை 40 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

Published On 2022-04-05 07:12 GMT   |   Update On 2022-04-05 07:12 GMT
புத்தக கண்காட்சி வருகிற 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியையொட்டி தினந்தோறும் மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்துடன் (பபாசி) இணைந்து நடத்தும் முதலாவது புத்தக கண்காட்சி கடந்த 1-ந் தேதி கலெக்டர் அலுவலகம் அருகே தொடங்கியது.

கண்காட்சியில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில், இலக்கியம், மருத்துவம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை நூல்கள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என 1 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புத்தக கண்காட்சி வருகிற 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியையொட்டி தினந்தோறும் மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் சினிமா நட்சத் திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிறப்பு நிகழச்சிகள் நடந்து வருகின்றன. புத்தக கண்காட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

கடந்த 4 நாட்களில் குழந்தைகள் முதல் பெரியோர்வரை என இது வரை சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு உள்ளனர். ரூ.35 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளன.

கண்காட்சியில் புத்தகங்கள் அனைத்தும் 10 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. இன்று 5-வது நாளாக புத்தக கண்காடசி நடக்கிறது.

Tags:    

Similar News