உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கோடை வெயிலால் தாகத்தை தணிக்க நெல்லை அரசு ஆஸ்பத்திரி பகுதியில் நீர்-மோர் பந்தல் அமைக்க கோரிக்கை

Published On 2022-04-03 09:45 GMT   |   Update On 2022-04-03 09:45 GMT
கோடை வெயிலால் தாகத்தை தணிக்க நெல்லை அரசு ஆஸ்பத்திரி பகுதியில் நீர்-மோர் பந்தல் அமைக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை:

தமிழகத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும். 

நெல்லையிலும் சாலைகளில் கானல்நீர் தெரியும் அளவிற்கு கோடை வெயில் கடுமையாக இருக்கும். 

இதனையொட்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும்  வகையில் சாலையோரங்களில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர், தொண்டு அமைப் பினர், சமூக ஆர்வலர்கள் சார்பில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்படும். 

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிறுத்தங்கள், வங்கிகள், வாரச் சந்தைகள் ஆகிய பகுதிகளில் நீர்,-மோர் பந்தல் அமைக்கப்படும். 

இந்த ஆண்டும் தற்போது நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நீர்-மோர் பந்தல் வைக்க வேண்டுமென நோயாளிகளின் உறவினர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இங்கு நோயாளிகள், நோயாளி களின் உறவினர் கள் என ஏராளமானோர் தினமும் வந்து செல்வார்கள். 

அவர்கள் தங்களது தாகத்தை தீர்க்கும் வகையில் மருத்துவ மனை நுழைவு வாயில் அருகே நீர்,-மோர் பந்தல் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்  என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர்.

Tags:    

Similar News