உள்ளூர் செய்திகள்
இடமாற்றம்

திருநங்கைகளிடம் ரகளை செய்த 4 போலீசார் இடமாற்றம்

Published On 2022-04-01 09:36 GMT   |   Update On 2022-04-01 09:36 GMT
அசோக் நகரில் திருநங்கைகளிடம் ரகளையில் ஈடுபட்ட 4 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போரூர்:

அசோக் நகர் 100 அடி சாலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் திருநங்கை ஒருவர் வாலிபர்கள் சிலர் தன்னிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அசோக் நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது திருநங்கைகளிடம் ரகளையில் ஈடுபட்டது கே.கே. நகர் மற்றும் குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 4 போலீஸ்காரர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் ரோந்து வாகனத்தில் திருநங்கையை வலுக்கட்டாயமாக ஏற்றியதும் தெரியவந்தது.

இதுகுறித்து தெற்கு போலீஸ் இணை கமி‌ஷனர் நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர், கே.கே. நகர் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் 3 பேர் மற்றும் குமரன் நகர் போலீஸ்காரர் ஒருவர் என மொத்தம் 4 பேரையும் அதிரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News