உள்ளூர் செய்திகள்
ஜெயபால்

கயத்தாறு அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி

Published On 2022-03-31 06:56 GMT   |   Update On 2022-03-31 06:56 GMT
கயத்தாறு அருகே உள்ள குளத்தில் விவசாயி மூழ்கி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:

கயத்தாறு தாலுகா வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய பால் (வயது 55). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் நெற்பயிர்கள் நட்டிருந்தார். தற்போது அவை அறுவடைக்கு தயாராக உள்ளது.அங்கு இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.

இதனால் நெற்பயிருக்கு காவலுக்காக நேற்று இரவு ஜெயபால் வயலுக்கு சென்றார். அப்போது அருகில் உள்ள குளத்தில் தனது சாரம், சட்டை, செருப்புக்களை கழற்றி கரையில் வைத்து விட்டு குளத்துக்குள் இறங்கி மீன் பிடிக்க சென்றதாக தெரிகிறது.

அப்போது ஆழமான இடத்திற்கு சென்ற ஜெயபால் வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி குளத்திற்குள் இறந்து கிடந்தார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் வயலுக்கு வந்து அவரை காணவில்லை.

அங்கு தேடி பார்த்தனர். அதிகாலை 1 மணி அளவில் கிராம மக்கள் திரண்டு அங்குள்ள குளத்தில் தேடி பார்த்தனர். அங்கு பிணமாக ஜெயபால் உடலை மீட்டனர்.

இதுகுறித்து நாரைக்கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜெயபாலுக்கு யாகம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
Tags:    

Similar News