உள்ளூர் செய்திகள்
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சார்பில் தர்ணா.

ரெயிலை மறிக்க முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் 21 பேர் கைது

Published On 2022-03-28 10:16 GMT   |   Update On 2022-03-28 10:16 GMT
தஞ்சையில் மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் ரெயிலை மறிக்க முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்:

மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று பல்வேறு தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நாளையும் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சியினர், அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சார்பில் நகர செயலாளர் எஸ்.எம்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முடிவு செய்து ரெயில் நிலையத்துக்கள் செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் அவர்கள் ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயிலை மறிக்க முயன்றதாக 21 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையம் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News