உள்ளூர் செய்திகள்
விஜய் வசந்த்

மீனவர்கள் கைது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய விஜய் வசந்த்

Published On 2022-03-26 06:42 GMT   |   Update On 2022-03-26 06:42 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு அவர்கள் மீது அபராதம் விதிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி விஜய் வசந்த் எம்.பி. பாராளுமன்றத்தில் பேசினார்.
நாகர்கோவில்:

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. பாராளுமன்றத்தில் பேசியதாவது:-

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் குறிப்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலில் செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி பல்வேறு நாட்டு அரசுகளால் கைது செய்யப்படுகின்றனர். சமீபத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் அரசாங்கத்தின் கடற்படையினர் கைது செய்தனர். வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு பெரும்பாலான மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மிச்சமுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாராளுமன்றத்தில் அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு வந்து மத்திய அரசு பல்வேறு நாட்டு அரசுகளுடன் இராஜதந்திர ஒப்பந்தங்களை செய்து தவறுதலாக எல்லை தாண்டி வரும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது கடுமையான அபராத தொகை விதிப்பது தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இது குறிப்பாக கடிதமும் எழுதியுள்ளேன்.

இவ்வாறு விஜய் வசந்த் எம்.பி. பேசினார்.
Tags:    

Similar News