உள்ளூர் செய்திகள்
தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது- பழனிவேல் தியாகராஜன்

Published On 2022-03-23 12:50 GMT   |   Update On 2022-03-23 12:50 GMT
தமிழக அரசுத் துறைகளில் உள்ள 5 ஆயிரத்து 529 காலி பணி இடங்களுக்கு இதுவரை 9,10,644 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, 2ஏ பணிகளுக்கு விண்ணப்பிப்பது மற்றும் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பிப்ரவரி மாதம் 23-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த 5 ஆயிரத்து 529 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 21-ம் தேதி நடைப்பெற உள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்ற நிலையில் இதுவரை 9,10,644 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை நீக்காமல் விட்டு வைத்திருந்தேன்- வைகோ பரபரப்பு பேட்டி
Tags:    

Similar News