உள்ளூர் செய்திகள்
மர்மநோய் தாக்கி பலியான ஆடுகள்.

மர்மநோய் தாக்கி ஆடுகள் சாவு

Published On 2022-03-15 10:19 GMT   |   Update On 2022-03-15 10:19 GMT
கயத்தாறு அருகே மர்மநோய் தாக்கி ஆடுகள் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கயத்தாறு:
 
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 50). விவசாயி யான இவர்  வெள்ளாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். 

கடந்த 20 நாட்களாக  15 வெள்ளாடுகள் நோயால் அவதிப்பட்டன. மேலும் மர்மநோயால் சில ஆடுகள் பலியாகின. தொடர்ந்து தினமும் 2 ஆடுகள் பலியாகி வருவதால் அங்குள்ள ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும் எந்த நோயால் ஆடுகள் பாதிக்கப்படுகிறது?. அந்த பகுதியில் வேறு எங்கேனும் இது போன்ற தாக்குதல்கள் உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் வளர்த்து வந்த ஆடுகள் மர்மநோயால் இறந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் ஆடுகள் வளர்க்க வங்கிக் கடன் வழங்கவும், உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு வழங்கவும்  சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News