உள்ளூர் செய்திகள்
தீமிதி திருவிழா

சியாமளாதேவி கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2022-03-15 08:33 GMT   |   Update On 2022-03-15 08:33 GMT
கள்ளப்பெரம்பூர் அருகே சியாமளாதேவி கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
வல்லம்:

தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் இரண்டாம் சேத்தியில் கருணை மழை பொழியும் சியாமளாதேவி (என்கிற) காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 7-ம் தேதி காலை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் 9-ம் தேதி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், 11-ம் தேதி அம்மன் சக்தி 
கரக புறப்பாடு, 12-ம் தேதி காவடியும், இரவு அம்மன் சக்தி கரக புறப்பாடும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான 
பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

திருவிழாவில் கள்ளப்பெரம்பூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கள்ளப்பெரம்பூர் போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News