உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கருவலூர் ஊராட்சியில் இறைச்சி கடைகள் ஏலம்

Published On 2022-03-11 11:12 GMT   |   Update On 2022-03-11 11:12 GMT
வார சந்தை கடைகள் உள்ள வளாகம் மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
அவிநாசி:

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருவலூர் ஊராட்சியில் வாரச்சந்தை, தேர்த்திருவிழா கடைகள், ஆட்டு கசாப்புக்கடை, கோழி, மீன் இறைச்சி கடைகள் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும்.

வரும் 2022-23ம் நிதியாண்டுக்கான ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. இதில் வார சந்தை கடைகள் உள்ள வளாகம் மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. தேர்க்கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் ஏலம்  எடுக்கப்படவில்லை.

கோர்ட்டு வழிகாட்டுதல் படி இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை வெளியேற்ற பிரத்யேக இடம், தண்ணீர் வசதி, மின்சார வசதி உட்பட வசதிகளை செய்து கொடுத்தல் தான் ஏலம் எடுக்க முடியும் என ஏலதாரர்கள் கூறினர். 

இதனால் ஏலம் விடப்படவில்லை. இந்நிலையில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா துவங்கியுள்ள நிலையில் ஊராட்சி அலுவலகத்தில், தேர் திருவிழா கடைகள் ஏலம் விடப்பட்டன. மொத்தம், ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு கடைகள் வைக்க ஏலம் எடுக்கப்பட்டது.
Tags:    

Similar News