உள்ளூர் செய்திகள்
புஷ்பாஞ்சலி விழா நடைபெற்ற காட்சி.

நத்தம் பெருமாள் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா

Published On 2022-03-08 10:18 GMT   |   Update On 2022-03-08 10:18 GMT
நத்தம் பெருமாள் கோவிலில் 11-ம் திருவிழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது.
தென்திருப்பேரை:

நத்தம் பெருமாள் கோவிலில் 11-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை விஸ்வரூபம் திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமி எம் இடர்கடிவான் தாயார்களுடன் சயன மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

 11 மணிக்கு தாமரை, மல்லி, ரோஜா, துளசி, பச்சை போன்ற மலர்களால் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. கோவில் பட்டர்கள் புஷ்பாஞ்சலியை செய்தனர்.

இதைத்தொடர்ந்து மாலையில் நாலாயிரதிவ்யபிரபந்த கோஸ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன், தக்கார் அஜீத், ஆய்வாளர் நம்பி மற்றும் விஜயாசன பெருமாள் கைங்கர்ய சபாவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News