உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருக்குறுங்குடியில் விவசாயிகள் பயிற்சி முகாம்

Published On 2022-03-07 09:48 GMT   |   Update On 2022-03-07 09:48 GMT
களக்காடு வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம் திருக்குறுங்குடியில் நடந்தது.
களக்காடு:

களக்காடு வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் தோட்டகலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம் திருக்குறுங்குடியில் நடந்தது.

இதில் வாழை தார் அறுவடை செய்த பின் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பமான வாழை மட்டை உலர வைத்து நார் எடுத்து மதிப்பு கூட்டிய கைவினைப் பொருட்கள் தயார் செய்வது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் டேவிட் டென்னிஷன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தி, தோட்டகலை உதவி இயக்குநர் திலீப், துணை வேளாண்மை அலுவலர் காசி ஆகியோர் பேசினர்.

செய்யது அலி பாத்திமா மற்றும் வீரலெட்சுமி ஆகியோர் செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் நன்றி கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் திரிசூலம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் செய்திருந்தார்கள். இப்பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Tags:    

Similar News