உள்ளூர் செய்திகள்
பரமத்தி பபேரூராட்சியில் வார்டு கவுன்சிலருக்கு செயல் அலுவலரும் தேர்தல் அதிகாரியுமான செல்வகுமார் பதவி பிரமாணம் ச

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 447 பேர் பதவியேற்பு

Published On 2022-03-03 09:23 GMT   |   Update On 2022-03-03 09:23 GMT
நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 447 பேர் பதவியேற்புற்றனர்.
நாமக்கல்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் மாவட் டத்தில் 5 நகராட்சிகளில் 151 பதவிகளுக்கும், 19 பேரூராட்சிகளில் 288 பதவிகளுக்கும் என மொத்தம் 439 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  நகராட்சியில் 2 பேரும், பேரூராட்சிகளில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், போட்டியின்றி தேர்வானவர்கள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பதவியேற்றுக் கொண்டனர்.
குமாரபாளையம் நகராட்சி யில் 33, நாமக்கல் நகராட்சியில் 39, பள்ளிபாளையம் 11, ராசிபுரம் 27, திருச்செங்கோடு 33 என மொத்தம் 153 பேர் பதவியேற்றனர்.

 19 பேரூராட்சிகளில் நாமகிரிப் பேட்டை, பரமத்திவேலூர், சேந்தமங்கலம் பேரூராட்சி களில் தலா 18 பேரும், ஆலாம்
பாளையம், அத்தனூ£, எருமப்பட்டி, காளப்ப நாயக் கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூ£¢, படைவீடு, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லூர், பொத்தனூ£¢, ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, வெங்கரை, வெண்ணந்தூர் ஆகிய பேரூ ராட்சிகளில் தலா 15 பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.

நகராட்சி ஆணையர் கி.மு.சுதா பதவியேற்பு உறுதிமொழியை வாசிக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவியேற்றுக் கொண்டனர். பின்னா¢ ஆணையருடன் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்த வரை, 5 நகராட்சி களில் 153 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 106 இடங்க ளையும், அ.தி.மு.க. 29 இடங்களை யும், சுயேச்சைகள் 17 இடங்களையும், பா.ஜ.க. ஒரு இடத்தையும் கைப்பற்றின. 19 பேரூராட்சிகளுக்கு உள்பட்ட 294 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 221 இடங்களையும், அ.தி.மு.க. 53 இடங்களையும், சுயேச்சைகள் 19 இடங்களையும், பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News