உள்ளூர் செய்திகள்
மாணவியின் தாய்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தஞ்சை மாணவி

Published On 2022-03-01 10:33 GMT   |   Update On 2022-03-01 10:33 GMT
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தஞ்சை மாணவியை மீட்கக்கோரி தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்:

உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவ-மாணவிகளை மத்திய, மாநில அரசுகள் விமானம் மூலம் தாயகம் அழைத்து வந்த வண்ணம் உள்ளனர். 

இருந்தாலும் இன்னும் ஏராளமான மாணவர்கள் உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகம் உள்ளனர். இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்களும் அடங்கும்.
தஞ்சையை சேர்ந்த மாணவி மார்சலின், ஒரத்தநாட்டை சேர்ந்த ஆஷா உள்பட 9 மாணவிகள் உக்ரைனில் சிக்கி தவிக்கின்றனர். இந்த நிலையில் இன்று மாணவி மார்சலின்  தாய் ஜாக்குலின் கண்ணீர் மல்க அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனது மகள் மார்சலின் கடந்த 4 நாட்களாக சரிவர தூக்கம் இன்றியும், உணவு இல்லாமலும் போர் குண்டுகளுக்கு மத்தியல் உயிரை கையில் பிடித்து வசித்து வருகிறார். இதேப்போல் ஏராளமான மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். 

அவர்கள் அனைவரையும் உடனடியாக பத்திரமாக மீட்டு அழைத்து வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எல்லையை கடக்கவே முடியாத அசாதாரணமான சூழல் நிலவுகிறது. நேற்று எனது மகள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

அவர் ரெயில் மூலம் அங்கிருந்து புறப்பட்டதாக தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால்  எல்லையை கடக்க முடியவில்லை. இன்னும் தகவல் தொடர்பு இல்லாமல் ஏராளமானோர் தவிக்கின்றனர். உடனடியாக இந்திய மாணவர்கள் அனைவரையும் உக்ரைனை விட்டு பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News