உள்ளூர் செய்திகள்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் திருநங்கைகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கிய காட்சி.

ரெயில் பயணிகளிடம் பணம் வசூலிக்க கூடாது என்று திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது

Published On 2022-03-01 10:29 GMT   |   Update On 2022-03-01 10:29 GMT
ஜோலார்பேட்டை ரெயில் பயணிகளிடம் பணம் வசூலிக்க கூடாது என திருநங்கைகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலைய காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் திருநங்கை களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் திருநங்கைகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சுமார் 120-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி வந்து செல்கின்றனர் இதன் காரணமாக ஜோலார்பேட்டை ரெயில்வே நிலையத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதன் ஓடும் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதியை சேர்ந்த திருநங்கைகள் சிலர் தொந்தரவு செய்ததாக புகார் வந்துள்ளது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை வரவழைத்து ஓடும் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது. 

குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது. பயணி களிடம் வற்புறுத்தி பணம் கேட்க கூடாது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும் இதுபோல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News