உள்ளூர் செய்திகள்
நத்தம் பெருமாள் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தம் பெருமாள் கோவில் கொடியேற்றம்

Published On 2022-02-25 09:57 GMT   |   Update On 2022-02-25 09:57 GMT
ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தம் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
தென்திருப்பேரை:

நவதிருப்பதி தலங்களில் 2-வது தலமான ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தம் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

நாள்தோறும் இரவு 7மணிக்கு பெருமாள் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.

1-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் விஸ்வரூபம் திருமஞ்சனம் நடைபெற்றது. 10 மணிக்கு சுவாமி எம் இடர்கடிவான் தாயார்களுடன் கருட மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதை தொடர்ந்து கொடிப்பட்டம் மாடவீதி சுற்றி வந்தது. 11 மணிக்கு கோபாலகிருஷ்ண பட்டர் கொடியேற்றினார்.

அதைத்தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்றது. வருகிற 28-ந்தேதி 5-ம் திருவிழா முன்னிட்டு கருடசேவை நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கோகுல மணிகன்டன் ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News