உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட முடிவு

Published On 2022-02-25 09:32 GMT   |   Update On 2022-02-25 09:32 GMT
வரியினை செலுத்தியும் வாகனத்திற்குண்டான ஆவணங்களை தாக்கல் செய்தும் வாகனத்தினை விடுவித்து கொள்ளலாம்.
திருப்பூர்:

திருப்பூர் (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் அம்மன் கல்யாண மண்டபம் அருகில், காந்தி நகர் அஞ்சல், சாமுண்டிபுரத்தில் இயங்கி வரும் திருப்பூர் (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டு நீண்ட நாட்களாக அலுவலக வளாகத்தில் இருந்தும் இதுநாள் வரை விடுவிக்கப்படாமலும் யாரும் உரிமை கோராமலும் இருந்து வரும் வாகனங்களை சட்டப்படியும் அரசு வழிகாட்டு நெறிமுறையில் உள்ள படியும் பொது ஏலத்தில் விட அரசு முடிவு செய்துள்ளது. 

எனவே வாகனங்களை இந்த அறிவிப்பு தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் மேற்கண்ட அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் வாகனத்திற்கு உண்டான இணக்கக் கட்டணம் மற்றும் வரியினை செலுத்தியும் வாகனத்திற்குண்டான ஆவணங்களை தாக்கல் செய்தும் வாகனத்தினை விடுவித்து கொள்ளலாம். தவறும் பட்சத்தில் சட்டப்படி வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. 
Tags:    

Similar News