உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

Published On 2022-02-19 10:38 GMT   |   Update On 2022-02-19 10:38 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று காலை நடந்தது
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகம் நடந்து 8 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி 9-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று காலை நடந்தது. 

நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு இன்று இந்த வருஷாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. பின்னர் கணபதி ஹோமமும் நவகலச பூஜையும் நடந்தது. 

அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான ஷோடசா அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு கலசா பிஷேகமும் நடந்தது.

வருஷா பிஷேகத்தையொட்டி வைர கிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் உச்சிகால பூஜையும் உச்சிகால தீபாராத னையும் நடந்தது அதனைத் தொடர்ந்து மதியம் அன்னதானம் நடந்தது.

மாலையில் சாயரட்சை தீபாராதனையும் இரவு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. 

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத் தினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News