உள்ளூர் செய்திகள்
மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

மதுரை மேலூர் ஹிஜாப் விவகாரம் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் உறுதி

Published On 2022-02-19 06:53 GMT   |   Update On 2022-02-19 06:53 GMT
நலிவுற்றவர்கள்,மூத்த குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, மொத்தம் 8.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடி அமைந்துள்ள கட்டடத்தில் சரிவுப்பாதை , மூன்று சக்கர நாற்காலி வசதி மற்றும் உதவியாளர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பார்வையற்றோர் உதவியாளருடன் சென்று வாக்களிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மேலூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்காளர் வாக்களிக்க பாஜக பூத் கமிட்டி உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும் என்று  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். 

அவர் அளிக்கையின் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News