உள்ளூர் செய்திகள்
தமிழ் நாடு அரசு

ரூ.1157 கோடியில் முதல் தவணையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.665 கோடி ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

Published On 2022-01-30 10:33 GMT   |   Update On 2022-01-30 10:33 GMT
ரூ.1157 கோடியில் இப்போது முதல் தவணையாக ரூ.665 கோடி விடுவிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

சென்னை:

உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மூலதன மானிய நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி ரூ.1157 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது

ரூ.1157 கோடியில் இப்போது முதல் தவணையாக ரூ.665 கோடி விடுவிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

மாநில அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.133 கோடியும், மாவட்ட அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.532 கோடியும் விடுவித்து உள்ளது.

ஊரக பகுதிகளில் உள்ள சுமார் 2500 கி.மீ. சாலைகள் இந்த நிதியின் மூலம் மேம்படுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகத்திற்கும் மூலதன நிதி செலவிடப்படும்.

Tags:    

Similar News