உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Published On 2022-01-28 10:52 GMT   |   Update On 2022-01-28 10:52 GMT
கோவையில் தேர்தல் கட்டுப்பாறை அறை திறக்கப்பட்டு புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை:

கோவை மாநகராட்சி கமிஷ்னர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தல் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் நடவடிக்கைகளுக்கு  பயன்படுத்தப்படும் அறைக் குள், வளாகத்துக்குள் நுழைபவர்களை தெர்மல் ஸ்கேனிங்குக்கு உட்படுத்த வேண்டும். சோப்பு,கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும். 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 

வேட்பு மனு தாக்கல் தொடங்கும்முன் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல்  நடத்தும் அலுவலர் ஆகியோரின் அறைகள் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்த வேண்டும். வேட்பு மனு தாக்கலுக்கு வேட்பாளர்கள் வருகையின்போது 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். முதல் வேட்பாளர் மனு தாக்கல்செய்து வெளியே வந்த பிறகே அடுத்த வேட்பாளர் நுழைய அனுமதிக்கப்படுவார்.

நிர்ணயிக்கப்படும் நேரத்துக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வரும் அனைத்து வேட்பாளர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் நுழைபவர்கள் மட்டுமே வேட்பு மனுக்களை சமர்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். 

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள், சந்தேகங்களுக்கு கோவை மாநகராட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்.0422&2300130என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. 
Tags:    

Similar News