உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

காலி பணியிடங்களை நிரப்ப சாலை பணியாளர்கள் கோரிக்கை

Published On 2022-01-28 08:29 GMT   |   Update On 2022-01-28 08:29 GMT
கிராமப்புற இளைஞர்களை கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சாலை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கரூர்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலை சங்க கரூர் கோட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் செவந்திலிங்கம் தலைமையில் நடந்தது.

துணைத்தலைவர் பழனிவேல், இணை செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி வரவேற்றார்.

இணைச் செயலாளர் சிவக்குமார் சங்க கொடியேற்றினார். மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.

பொருளாளர் பாலசுப்பிரமணி வரவு, செலவு அறிக்கை படித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் பொன்ஜெயராம், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வராணி ஆகியோர் பேசினர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். கோட்ட துணைத்தலைவர் செல்வராசு நன்றி கூறினார்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கருதி ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும்.

காலி பணியிடங்களை கிராமப்புற இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News