உள்ளூர் செய்திகள்
ஏலத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்

மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

Published On 2022-01-28 08:19 GMT   |   Update On 2022-01-28 08:19 GMT
திண்டுக்கல் சீலப்பாடியில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டது
திண்டுக்கல்:

திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் தொடங்கியது. இதற்காக ஏராளமான வாகனங்கள் அங்குள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மோட்டார் சைக்கிளை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் தொகையை செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை எடுக்க விரும்பும் நபர்கள் தொகை முழுவதையும் செலுத்திய பிறகே வாகனங்கள் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதிச்சீட்டு கடந்த 2 நாட்களாக வழங்கப்பட்டது.

ஏலத்தொகையை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியுடன் செலுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்தார்.

வாகனங்களை ஏலம் எடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தாங்கள் விரும்பிய மாடலில் வாகனங்களை ஏலம் எடுத்து சென்றனர்.
Tags:    

Similar News