உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதிய அகல ரெயில் பாதையில் 31ந் தேதி அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-01-27 08:48 GMT   |   Update On 2022-01-27 08:48 GMT
மதுரை தேனி இடையே முடிவு பெற்ற அகல ரெயில் பாதை பணியை அதிகாரிகள் வருகிற 31ந் தேதி ஆய்வு செய்கின்றனர்.
தேனி:

மதுரை தேனி இடையே முடிவடைந்துள்ள புதிய அகல ரெயில்பாதையை வருகிற 31ம் தேதி ரெயில்வே பாதுகாப்புக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர் என்று ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்தார்.

மதுரை போடி புதிய அகல ரெயில் பாதை திட்டத்தில் மதுரை தேனி ஆகிய ஊர்களுக்கு இடையே பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனிடையே தேனியில் ரெயில் நிலைய கட்டுமான பணிகள், கட்டுப்பாட்டு அறை, உயர் அழுத்த மின் பாதைகளை மாற்றும் பணி ஆகியவற்றை ரவீந்திரநாத் எம்.பி. பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆண்டிபட்டி தேனி அகல ரெயில்பாதையில் ரெயில்வே துறை சார்பில் வருகிற 31ம் தேதி விரைவு ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

அதே நாளில் மதுரை தேனி அகல ரெயில் பாதையை ரெயில்வே பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். புதிய ரெயில்பாதைக்கு குறுக்கேசெல்லும் உயர் அழுத்த மின் பாதையை மாற்றியமைக்கும் பணிகள் நிறைவடைந்ததும், மதுரை தேனி இடையே ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது மதுரை ரெயில்வே -கூடுதல் நிர்வாக பொறியாளர் சரவணன், முதன்மை மின் பொறியாளர் ராஜன், மின் தொடரமைப்பு கழக உதவி இயக்குனர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News