உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-01-26 04:56 GMT   |   Update On 2022-01-26 04:56 GMT
சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் விவரங்களுடன் பிப்ரவரி 10-ந் தேதிக்குள் கல்வி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்;

ப்ரீ மெட்ரிக்‘ மற்றும் ‘போஸ்ட்மெட்ரிக்‘ கல்வி உதவித்தொகை பெற பிப்ரவரி 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் 2021-22ம் கல்வியாண்டில், ‘ப்ரிமெட்ரிக்‘ மற்றும் போஸ்ட்மெட்ரிக்‘ கல்வி உதவி திட்டத்தில் 9ம் வகுப்பு முதல் கல்லூரி கல்வி வரை பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கப்படுகிறது.

தகுதியான மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து ஜாதிச்சான்று, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் விவரங்களுடன் பிப்ரவரி 10-ந் தேதிக்குள் கல்வி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை, escholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News