உள்ளூர் செய்திகள்
மாயம்

விழுப்புரம் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயம்

Published On 2022-01-25 11:40 GMT   |   Update On 2022-01-25 11:40 GMT
விழுப்புரம் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேது. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 20). இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று ஜவுளி கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற பழனியம்மாள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சி அடைந்த சேது அவரது மனைவி பழனியம்மாளை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து சேது கஞ்சனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன புதுப்பெண் பழனியம்மாள் எங்கு சென்றார் என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள பழைய கருவச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மகள் தீபா (வயது 16). இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பொங்கலை முன்னிட்டு தனது சொந்த ஊரான பழைய கருவச்சி வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற தீபா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தீபாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து தீபாவின் தாய் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன பள்ளி மாணவி தீபா என்ன ஆனார் எங்கு சென்றார் அவரை யாரேனும் கடத்திச் சென்றனரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செந்தமிழ் நகரை சேர்ந்தவர் தர்மர்(71). இவரது மனைவி ஜோதி (65). இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். வயதான தம்பதி இருவரும் ஒவ்வொரு மகன்களின் வீட்டிலும் 2 முதல் 3 மாதம் வரை தங்குவது வழக்கம். சம்பவத்தன்று தம்பதி இருவரும் தனது 2வது மகனான மணிகண்டன் வீட்டில் இருந்தனர்.

மணிகண்டன் தனது பெற்றோரை சரிவர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவர்களை மரியாதை குறைவாக நடத்தியுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தர்மர் வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து ஜோதி திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News