உள்ளூர் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய காட்சி.

உடன்குடியில் 58 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

Published On 2022-01-25 10:30 GMT   |   Update On 2022-01-25 10:30 GMT
தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் உடன்குடி பகுதியில் 58 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் உதவித்தொகைகளை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
உடன்குடி:

தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 58 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர், விதவைகள் உட்பட்ட 10 பேருக்கு உதவித் தொகை ஆகியவை வழங்கும் விழா உடன்குடி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. 

யூனியன் தலைவர்பாலசிங் தலைமை தாங்கினார். தாசில்தார் சுவாமிநாதன் வரவேற்றார்.வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரநாராயணன், யூனியன் துணைத்தலைவி மீரா சிராஜூதீன, வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:-
 
தமிழகத்தில் ஏழை, ஏளிய, நடுத்தர மக்களின் அடிப்படைத் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். 

இந்தியாவில் விரைந்து முன்னேறும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கிராமப்புற மேம்பாடு, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம், சமூகநீதி நிலைநாட்டல், மகளிர் நலன் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, மனிதவள மேம்பாடு என அனைத்திலும் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட முன்னேறிய நிலையில் இருப்பது நமக்கு எல்லாம் பெருமை. 

இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Tags:    

Similar News