உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

முகக் கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.13.33 லட்சம் அபராதம் வசூல்

Published On 2022-01-25 08:34 GMT   |   Update On 2022-01-25 08:34 GMT
முகக் கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.13.33 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது
கரூர்:

கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளான நேற்று முன்தினம் சட்ட விரோத மது விற்பனை செய்வது தொடர்பாக போலீசார் சோதனை நடததினர். இதில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப் பட்டு   அவர்களிடமிருந்து 360 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  
தீவிர வாகன சோதனையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்த 60 பேர் மீது  வழக்குப்பதிவு செய்து ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.   பொது இடங்கள், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,000 விதிக்கப்பட்டது.

கடந்த 8&ந்தேதி முதல் 23&ந்தேதி வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 2,667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.13,33,500 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு ரூ.15,500, விதிகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது.
Tags:    

Similar News