உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி

மாணவி லாவண்யா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-25 07:02 GMT   |   Update On 2022-01-25 07:02 GMT
மாணவி லாவண்யா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்:

அரியலூர் மாணவி லாவண்யாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும், தமிழகத்தில் கட்டாய மதமாற்ற  தடை சட்டத்தை  கொண்டு  வரவும்  வலியுறுத்தி,  கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நகரத்தலைவர் காமேஷ்வரன் தலைமையில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுச்செயலாளர்  முருகேசன்,  மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  திருச்சி கோட்ட தலைவர் வி.சி.கனகராஜ் கண்டன உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.

ரெங்கசாமி,  நிஷாந்த், ஷகில், முருகேஷ், கிருஷ்ணன், சதீஷ், கனகராஜ், பிரசன்னா, இளையராஜா, ஷங்கரி, வெற்றி,  பூபதி,  கோகுல், மணிகண்டன், விஜய், செந்தில்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் கே.சிவசாமி, கே.பி. மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News