உள்ளூர் செய்திகள்
முழு ஊரடங்கையொட்டி மதுரையில் பரபரப்பாக காணப்படும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழிகளில் ஒன்றான மேலகோபுர

மதுரையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

Published On 2022-01-23 08:11 GMT   |   Update On 2022-01-23 08:11 GMT
மதுரையில் முழு ஊரடங்கு காரணமாக அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மதுரை

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி  முதல்  முழுநேர ஊரடங்கு தொடங்கியது.  அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை. இரு சக்கர, 4 சக்கர வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.   மதுரை மாவட்டம் முழுவதும்  சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

போலீசார் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலை மற்றும் தெருக்களில் ரோந்து சென்று ‘பலசரக்கு மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்குகிறதா?’ என்பதை கண்காணிக்கும் பணியில்   ஈடுபட்டனர். வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு   அபராதம் விதித்தனர்.

கொரோனா விழிப்புணர்வு கண்காணிப்பு குழுவினர் நேற்று மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில்   சோதனை நடத்தினர்.   முக கவசம் அணியாமல் திரிந்த  106 பேர் பிடிபட்டனர்.  அவர்களிடம் இருந்து ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோன்று கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 152  நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரத்து 700  அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி பகுதியில் நேற்று மட்டும் 258 பேரிடம் ரூ.24 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமலை நாயக்கர் மஹால், ராஜாஜி பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு தலங்கள் மூடப்பட்டிருந்தன.

மதுரை மாவட்டத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு கோவிலில் அனுமதி இல்லை.    மீனாட்சி அம்மன் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில், அழகர்கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் இன்று  பொதுபோக்கு வரத்துக்கு தடை உள்ள போதிலும் ரெயில்கள் வழக்கம்போல் ஓடின.

ரெயில் பயணிகளிடம் போலீசார் டிக்கெட்டுகளை வாங்கி சரிபார்த்து, அதன் பிறகே வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர். 

அத்தியாவசிய பணிக ளான பால், பத்திரிகை, மருத்துவ சேவைகள், ஏ.டி.எம் மையம், பெட் ரோல் பங்குகள், சரக்கு போக்கு வரத்து, மருந்துக் கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டு இருந்தது.

மதுரை மாவட்டத்தில் 17 போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன. இதுதவிர போலீசார் 80 பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகளை ஏற்படுத்தி வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.  மதுரை மாவட்டம் முழு வதிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News