உள்ளூர் செய்திகள்
மலர் நாற்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் புதிய மலர் நாற்றுகள் நடவு பணி

Published On 2022-01-23 06:01 GMT   |   Update On 2022-01-23 06:01 GMT
கோடை சீசனுக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற உள்ள  கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியை காண வரும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் விதமாக பிரையண்ட் பூங்காவில் மலர் நாற்றுகள் நடும் பணி 2ம் கட்டமாக நடைபெற்றது.

இந்த நடவுப்பணியில் கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட உயர்ரக 30 வகையான, 3500 டேலியா மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் இந்த டேலியா நாற்றுகள் எதிர் வரும் சீசன் காலங்களில் பல வண்ணங்களில் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக பூத்துக்குலுங்கும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த நாற்றுகள் நடவுப்பணி 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில் இந்த ஆண்டாவது ஏப்ரல் மாதத்துக்குள் கொரோனா கட்டுக்குள் வந்து மக்களின் இயல்பு வாழ்க்கை  மீண்டு வர வேண்டும் என்று கொடைக்கானல் வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News