உள்ளூர் செய்திகள்
கண்மாய்க்குள் இறங்கி போராட்டம் நடத்திய கிராம மக்கள்.

கண்மாயில் அத்துமீறி மீன் பிடித்த படகை சிறைபிடித்த கிராம மக்கள்

Update: 2022-01-22 10:52 GMT
அவனியாபுரம் அருகே கண்மாயில் அத்துமீறி மீன் பிடித்த படகை கிராம மக்கள் சிறைபிடித்தனர்
அவனியாபுரம்


மதுரை அவனியாபுரம் அய்வேத்தந்தல் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட ஆயாவேட்டான் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் எந்தவித அனுமதியும் இன்றி தனிநபர் மீன்வளத்துறை அதிகாரிகளையும் கிராம மக்களையும் ஏமாற்றி பல லட்சம் பெறுமான மீன்களை பிடித்து வந்தார். 

இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை காவல்துறையிடம் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை அந்த நபர் திறந்து விடவும் மறுக்கிறார். 

இது போன்ற புகாரின் அடிப்படையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மீன்பிடி படகு மற்றும் வலைகளை சிறைபிடித்தனர். பின்னர் அந்த தனிநபர் கிராம மக்களை கண்டவுடன் ஓடிவிட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இது போல் நடந்தால் சாலை மறியலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News