உள்ளூர் செய்திகள்
கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்த காட்சி.

குரும்பூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

Published On 2022-01-22 10:10 GMT   |   Update On 2022-01-22 10:10 GMT
குரும்பூரில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் அழகப்புரம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
குரும்பூர்:

தமிழகஅரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தமிழகம் முழுவதும் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. குரும்பூர் அடுத்த அழகப்பபுரம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார் மற்றும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சந்தோசம் முத்துக்குமார் தலைமை தாங்கினர். 

இதில் அழகப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பூமாரி பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த கலப்பின கிடாரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு விருதும் வழங்கினார்.

முகாமில் கால்நடை வளர்ப்பு, கால்நடைகள் நோய் மற்றும் அறிகுறிகள் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. முகாமில் நாலுமாவடி கால்நடை மருந்தக மருத்துவர் சுரேஷ் தலைமையில் பசுக்களுக்கு கருப்பை, சினைப் பரிசோதனை, ஆண்மை நீக்கம் மற்றும் குடல்புழு நீக்கம் போன்ற பணிகள் நடைபெற்றது. 
Tags:    

Similar News