உள்ளூர் செய்திகள்
கள்ளபிரான் கோவிலில் திருவேடுபறி நிகழ்ச்சி நடந்த காட்சி.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் திருவேடுபறி நிகழ்ச்சி

Published On 2022-01-22 09:57 GMT   |   Update On 2022-01-22 09:57 GMT
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் அத்யயன உற்சவம் நடைபெற்று வருகிறது. ராப்பத்தின் 8-ம் திருநாளில் திருவேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் முதலாவது தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் அத்யயன உற்சவம் நடைபெற்று வருகிறது. 

ராப்பத்தின் 8-ம் திருநாளில் திருவேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவேடுபறி நிகழ்ச்சி வைஷ்ணவ கோவில் களில் அத்யயன உற்சவத்தில் நடைபெறுவது வழக்கம். 

திருமங்கை மன்னன் பெருமாளிடம் திருவா பரணங்களையும் செல்வங்களையும் களவாடும் நிகழ்ச்சியே திருவேடுபறி ஆகும். 

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் திருமங்கை மன்னன் ஆழ்வார் சிலருடன் வந்து திருவாபரணங்களையும் செல்வங்களையும் களவாடி செல்லுகின்ற போது கள்ளபிரான் சுவாமி குதிரை வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டிப் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் திருமங்கை மன்னன் கள்ளபிரான் சுவாமிடம் வந்து தான் திருடியதை ஒப்புக்கொள்கிறார். தலத்தார்  களவாடப்பட்ட பொருள்களை ராஜப்பா வெங்கடாச்சாரி பட்டயம் வாசித்து திரும்ப பெறுவதான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி ராதா (பொறுப்பு), ஆய்வாளர் நம்பி, தலத்தார்கள் சீனிவாசன், கண்ணன், திருவேங்கடத்தான், மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News