உள்ளூர் செய்திகள்
கோர்ட்டு ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்ட காட்சி.

சாத்தான்குளம் கோர்ட்டில் கபசுர குடிநீர் விநியோகம்

Published On 2022-01-21 10:13 GMT   |   Update On 2022-01-21 10:13 GMT
தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி உத்தரவின் பேரில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவம் சார்பில் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்  ராஜசெல்வி உத்தரவின் பேரில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவம் சார்பில் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது. 

குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிபதி ரமேஷ்  தொடங்கி வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் நீதிமன்ற பணியாளர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

 அரசு சித்த மருத்துவர் டாக்டர் வைகுண்டரமணி பேசியதாவது:-
 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் ஜூஸ்,முருங்கை இலை சூப் தினந்தோறும் அருந்துங்கள். மேலும் துளசி இலை, ஓமவல்லி இலையை தினந்தோறும் மென்று சாப்பிட கொரோனா வைரஸ் மற்றும்  எந்த வகை நோய்க்கிருமியுமே தொண்டையை தாக்காது என்றும்,பாரம்பரிய உணவு முறை பற்றியும்  கூறினார்.

விழாவில் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருந்தாளுநர்கள் சித்திரைராஜன், சங்கரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். 

 நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அரசு சித்த மருத்துவர் டாக்டர் வைகுண்ட ரமணி செய்திருந்தார்.
Tags:    

Similar News