உள்ளூர் செய்திகள்
பயிற்சி முகாம் நடந்த போது எடுத்த படம்.

நாகர்கோவில் வட்டார உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

Published On 2022-01-20 11:06 GMT   |   Update On 2022-01-20 11:06 GMT
நாகர்கோவில் வட்டார உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.
கன்னியாகுமரி:

குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கும் அகஸ்தீஸ்வரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் கன்னியாகுமரியில்    நடந்தது.

இந்த  பயிற்சி முகாமுக்கு அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் அழகேசன் தலைமை தாங்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அகஸ்தீஸ்வரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அதிகாரி சித்ரா வரவேற்றுப் பேசினார்.

பயிற்சி முகாமில் லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயகுமாரி லீன், பஞ்சலிங்க புரம் பஞ்சாயத்து தலைவி சிந்து செந்தில், சாமிதோப்பு பஞ்சாயத்து தலைவர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த பயிற்சி முகாமில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட 12 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த தலைவர்கள் துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் குறித்து வீடியோ படக்காட்சி மூலம் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அகஸ்தீஸ்வரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News