உள்ளூர் செய்திகள்
வி.ஏ.ஒ. அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம்.

வீட்டுமனைப்பட்டா கேட்டு வி.ஏ.ஒ. அலுவலகம் முற்றுகை

Published On 2022-01-20 11:01 GMT   |   Update On 2022-01-20 11:01 GMT
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பட்டா கேட்டு கிராம மக்கள் வி.ஓ.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடத்தூர்:

தருமபுரி மாவட்டம், கடத்தூர்  அடுத்த ஒசஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட போசிநாயக்கனஅள்ளி, ஒசஅள்ளி,வேடியூர், பாசாரப்பட்டி உள்ளிட்ட 8 குக் கிராமங்களில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின் றனர். 

இதில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா இல்லாமல் உள்ளனர். 

இவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை பஞ்சாயத்துக்கு உட்பட்ட  கரடு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தி, நேற்று காலை 11 மணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில், போசிநாய்கனஅள்ளி கிராம மக்கள் வி.ஏ.ஒ ஆபீசைமுற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

மேலும் மாவட்ட கலெக்டர்  தங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என கோஷமிட்டு முற்றுகையில் ஈடுபட்டனர். அதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில் தார் பாலசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் ரஞ்சித் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட் டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News