உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டில் ரூ.150 கோடி ஜவுளிகள் தேக்கம்

Published On 2022-01-20 10:31 GMT   |   Update On 2022-01-20 10:31 GMT
இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டில் ரூ.150 கோடி ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மஞ்சள்-, ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. குறிப்பாக இங்கு நடைபெறும் தினசரி மற்றும் வாரச்சந்தைகள் தென்னிந்திய அளவில் மிக புகழ்பெற்றவை.

இங்கு குறைவான விலையில் இருந்து அதிக விலை வரை அனைத்து ஜவுளி ரகங்களும் கிடைப் பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளி பொருட்களை வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் கொரோனோ பரவல் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமலப்படுத்தி உள்ளது.இதன் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தைகளில் பொங்கல் விற்பனையானது பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள கனி மார்க்கெட்,சென்ட்ரல் தியேட்டர் மார்கெட் ,அசோகபுரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கால் ஜவுளி சந்தைகளில் நடைபெறும் ஓட்டுமொத்த ஜவுளி வியாபாரம் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

இதனால் கோடிக்கணக்கான மதிப்பில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.

இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

இரவு நேர ஊரடங்கால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொங்கல் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஜவுளி வர்த்தகம் ஸ்தம்பித்து போகும் அளவுக்கு உள்ளது.

ஒரு புறம் நூல் விலை ஏற்றம் மற்றொரு புரம் இரவு நேர ஊரடங்கு என வெளிமாநில வியாபாரிகள் வரத்து குறைந்து உள்ளது. பொங்கலுக்கு தயார் செய்யப்பட்ட ஆடைகள் அனைத்தும் தேக்கம் அடைந்து உள்ளது.

ரூ. 150 கோடிக்கு மேல் ஜவுளிகள் தேக்கம் அடைந்து உள்ளதால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளோம். இரவு நேர ஊரடங்கு காரணமாக மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

இன்னும் சில நாட்கள் இதே நிலைமை நீடிக்கும் என்பதால் எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News