உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் முதல்வருக்கு கோரிக்கை

Published On 2022-01-20 09:25 GMT   |   Update On 2022-01-20 09:25 GMT
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி:

தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விவசாய மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி  ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:&

தமிழ்நாடுகள் இயக்கம் மாநிலம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கள் இறக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளது.  இதற்கு எங்கள் தார்மீக ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். இன்றைய கால கட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் தங்களின் சொற்ப வருமானத்தில் பெரும் பங்கினை மதுவுக்கு செலவழிக்கிறார்கள். 

டாஸ்மாக் வருமானத்தில் சரிபாதி தொழிலாளர் வர்க்கம் மூலமே அரசுக்கு செல்கிறது. தற்போதைய நிலையில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. 

ஆகவே தென்னை, பனை மரங்களில்  இருந்து கள் இறக்கி மலிவு விலைக்கு விற்பனை செய்தால் அந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும் காப்பாற்றப்படுவார்கள். கற்பகதருவான பனைமரங்களின் எண்ணிக்கையும் 130 கோடியில் இருந்து 10 கோடியாக சுருங்கிவிட்டன.
 
கள் இறக்க அனுமதித்தால் பனை ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News