உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவையும் படத்தில் காணலாம்.

திண்டுக்கல் அருகே 250 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-01-20 08:44 GMT   |   Update On 2022-01-20 08:44 GMT
திண்டுக்கல் அருகே காரில் கடத்தி வந்த 250 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:

தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பெங்களூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு குட்கா பொருட்கள் கடத்தப்படுகிறது.

எனவே சோதனையை தீவிரப்படுத்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்படி எஸ்.பி. தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, சேக்தாவுத், போலீசார் சந்தியாகு, செந்தில், சங்கரநாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் 250 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது. காரை ஓட்டிவந்த பெங்களூரை சேர்ந்த வினய்குமார் (வயது 36) என்பவரை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் நத்தத்தை சேர்ந்த வியாபாரி கந்தசாமி (45) என்பவருக்கு குட்கா பொருட்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கந்தசாமியையும் கைது செய்த தனிப்படை போலீசார் வேடசந்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர்  பாலமுருகன், சப்&இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், பாண்டியன் ஆகியோர் அவர்களிடம் குட்கா கடத்தல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News