உள்ளூர் செய்திகள்
.

சேலத்தில் தடை செய்யப்பட்ட இடங்கள் 33 ஆக அதிகரிப்பு

Published On 2022-01-20 08:25 GMT   |   Update On 2022-01-20 08:25 GMT
சேலம் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலால் தடை செய்யபப்ட்ட இடங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலம்:

சேலம்  மாவட்டத்தில்   கொரோனா  3-வது அலை  நாளுக்கு நாள் அதி வேகமாக பரவி வருகிறது.

இதனை தடுக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி  நிர்வாகம்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும்  அதையும் மீறி  சேலம் மாநகரில்  நேற்று ஒரே நாளில் 395 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 785 பேருக்கு தொற்று    உறுதி செய்யப்பட்டது.  

சேலம் மாநகரை சேர்ந்த 1513 பேர் கொரோனா£வால் பாதிக்கப்பட்டு  ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பலர் வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளனர்.  

அதன் தொடர்ச்சியாக   சேலம் மாநகரில்  தடை  செய்யப்பட்ட பகுதிகள்  27-ல் இருந்து 33 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் வேறு நபர்களுக்கு கொரோனா தொற்று   பரவாத வகையில் கண்காணிப்பு நடவடிக்கை களை  அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு
உள்ளனர்.

மேலும் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் முழுவதும் தடை செய்யப்படுவதோடு, அங்கு வசிக்கும் மக்களுக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள்,  மளிகை பொருட்கள்  வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News