உள்ளூர் செய்திகள்
அரசு பேருந்துகள்

பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.119 கோடி வருமானம்

Published On 2022-01-20 04:55 GMT   |   Update On 2022-01-20 04:55 GMT
அரசு ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் வெளியூர்களுக்கு அதிகளவு பயணம் செய்தனர். இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
சென்னை:

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் பண்டிகைக்கு முன்பும், 17, 18, 19-ந்தேதியில் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்புவதற்கும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அரசு ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் வெளியூர்களுக்கு அதிகளவு பயணம் செய்தனர். இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

11, 12, 13 ஆகிய 3 நாட்களில் சுமார் 5 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர். இதன்மூலம் ரூ.62 கோடி வருவாயும், 17, 18, 19-ந்தேதிகளில் 4.5 லட்சம் பேர் பயணம் செய்ததன் மூலம் ரூ.57 கோடியும் வருமானமும் கிடைத்தது.

கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலும் பொங்கல் பண்டிகை பயணத்தை அதிகளவு மேற்கொண்டுள்ளனர்.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட 8 போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்ததன் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News