உள்ளூர் செய்திகள்
ஜீவானந்தம் உருவப்படத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. மரியாதை செலுத்திய காட்சி

நினைவு தினம்... ஜீவானந்தம் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.

Update: 2022-01-19 11:36 GMT
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைமை அலுவலகத்தில் ஜீவானந்தத்தின் திருவுருவப்படத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் ஜீவானந்தத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜீவானந்தத்தின் திருவுருவப்படத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாநில செயல் தலைவர் எம். ஜி. ராமசாமி, வர்த்தக காங்கிரஸ் மாநில துணை தலைவர் சித்ரா கிருஷ்ணன், மாநில பொது செயலாளர்கள் சைதை மணி, தணிகாசலம், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பெர்னட் ஜான்சன், தணிகைவேல், பெருங்குடி செந்தில்குரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News