உள்ளூர் செய்திகள்
காளைகள் மீதான தாக்குதல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

காளைகள் மீதான தாக்குதல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

Published On 2022-01-19 11:20 GMT   |   Update On 2022-01-19 11:20 GMT
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் மீதான தாக்குதல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.
அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் கடந்த 15-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல் நாளே காளைகள் அழைத்து வரப்பட்டு அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தடுப்பு வழியாக வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது. 

அப்போது சிலர் காளைகளை வரிசையில் இடையில் சேர்க்க முயற்சித்தபோது காளை உரிமையாளர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அப்போது ஒரு நபர் காளைகளையும், காளை உரிமையாளர்களையும் கட்டையை வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த பாலமேடு அரசு பள்ளி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

மேலும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் உத்தர விட்டார்.

இதேபோல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது தங்களது காளைகளை அடக்கிய வீரர்களை, மாட்டின் உரிமையாளர்கள் சிலர் களத்திலேயே தாக்கினர். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் பரவியது. 

அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News