உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அலகுமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் - 23ந்தேதி நடக்கிறது

Published On 2022-01-19 07:18 GMT   |   Update On 2022-01-19 07:18 GMT
படிக்கட்டுகள், ஆறுபடை வீடு, முன் மண்டபம், கோபுரம், மதில் சுவர் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு கோவில் தயார் நிலையில் உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் அலகுமலையில் உள்ள முருகப்பெருமான், முத்துக்குமார பால தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். பாலதண்டாயுதபாணி கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் பல மாதங்களாக நடந்து வருகின்றன.

படிக்கட்டுகள், ஆறுபடை வீடு, முன் மண்டபம், கோபுரம், மதில் சுவர் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீட்டில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

நாளை 20-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, 21-ந் தேதி முதல் கால யாக பூஜை, 22-ந்தேதி காலை இரண்டாம் கால யாகபூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை, 23-ந் தேதி காலை நான்காம் கால யாக பூஜை நடக்கிறது.

தொடர்ந்து முத்துக்குமார பாலதண்டாயுதபாணி திருக்கோவில் விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், பாலதண்டாயுதபாணி சுவாமிகள் மூலாலய மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை திருக்கல்யாண வைபவம், புதிய தேர் பவனி, திருவீதி உலா நடக்க உள்ளது.
Tags:    

Similar News